News 5  
செய்திகள்

News 5 - (02-07-2024) பின்னுக்கு தள்ளப்பட்டாரா பில்கேட்ஸ்?

கல்கி டெஸ்க்

பில்கேட்ஸ் பின்னுக்கு தள்ளப்பட்டார்!

Bill Gates and Steve Ballmer

உலக பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளினார் அந்நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் பால்மர். அவர் வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் பங்குகளின் மதிப்பு அதிகரித்ததால் சொத்து மதிப்பு 157 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனத்தின் இணை நிறுவனரை விட பணக்காரராக இருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

உலக கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்கள்!

Guinness record

நெதர்லாந்தில் 180 அடி மற்றும் 11 அங்குல நீளம் கொண்ட உலகின் மிக நீளமான சைக்கிளை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ள இளைஞர்கள். 2020-இல் ஆஸ்திரேலியாவின் பெர்னி ரியான் வடிவமைத்த 155 அடி மற்றும் 8 அங்குல சைக்கிளின் சாதனை முறியடிப்பு.

1 லட்சம் 4 லட்சமாகும் - பண மோசடி கும்பல்!

Financial fraud

ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 4 லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனக் கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இயங்கிய ஸ்வர்ணதாரா என்ற நிறுவனத்தின் தொழில் கூட்டாளியும் திருவள்ளூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியருமான பாண்டுரங்கன் மற்றும் அவரது மனைவி, மகள், மகன்கள் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகளிடம் 87 கோடி ரூபாய் வரை வசூல் செய்து ஏமாற்றியதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

Thalapathy Vijay

தமிழக வெற்றி கழகம் சார்பில், இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் கடந்த 28ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த விழா முதல் கட்டமாக 21 மாவட்ட தொகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள மாவட்ட மாணவ மாணவிகளுக்கான கல்வி விருது வழங்கும் விழா இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நாளை நடைபெற உள்ளது.

இளம் வீரர்களுக்கான டி20 உலக கோப்பை!

India Cricket team

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றிய நிலையில், தற்போது ஜிம்பாப்வேக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க செல்கிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டி வரும் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

இருப்பது போதும் என்று நினைத்தால் மகிழ்ச்சி நிலைக்கும்!

SCROLL FOR NEXT