News 5 
செய்திகள்

News 5 – (03-08-2024) "கமலா ஹாரிசுடன் நேரடி விவாதம்" - ட்ரம்ப் அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

கமலா ஹாரிசுடன் நேரடி விவாதம் - ட்ரம்ப் அறிவிப்பு!

"Live Debate With Kamala Harris" - Trump Announcement!

கமலா ஹாரிசுடன் அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதத்தில் செப்டம்பர் 4-ஆம் தேதி பங்கேற்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் ஃபாக்ஸ் நியூஸ் சார்பில் அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளி பயணத்துக்கு சுபான்ஷு சுக்லா தேர்வு!

Subhanshu Shukla

நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு இந்தியாவில் இருந்து சுபான்ஷு சுக்லா தேர்வாகியுள்ளார். மாற்று வீரராக பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி!

Deepika Kumari

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மன் வீராங்கனையை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

தீபாவளியன்று வெளியாகும் ‘BROTHER' திரைப்படம்!

'BROTHER' movie

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘BROTHER' திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

4 ஆம் இடம் பிடித்து வெளியேறினார் இந்திய வீராங்கனை மனு பாக்கர்!

Manu Pakar

பாரிஸ் ஒலிம்பிக் 25 மீ ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் 4 ஆம் இடம் பிடித்து வெளியேறினார் இந்திய வீராங்கனை மனு பாக்கர். 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்ற நிலையில் மூன்றாவது பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டத்தை அடுத்து, 4 ஆம் இடம் பிடித்து வெளியேறியுள்ளார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT