News 5 
செய்திகள்

News 5 (04-09-2024) 'தி கோட்' திரைப்படத்திற்கு தியேட்டர் ஹவுஸ்புல்!

கல்கி டெஸ்க்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்!

Missile attack: Russia on Ukraine

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போல்டாவா நகரில் உள்ள ராணுவ அகாடெமியையும், அதன் அருகிலுள்ள மருத்துவமனை மீதும் ரஷ்யா இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிகாகோவில்  ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

Tamil Nadu Government with Eaton Company

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று சான் ஃபிரான்ஸிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ சென்றார். அங்கு சிகாகோவில் உள்ள ஈட்டன் நிறுவனம், தமிழகத்தில் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் அமைக்க இந்த ஒப்பந்தம் என கூறப்படுகிறது.

தூத்துக்குடி- மாலத்தீவு இடையே புதிய கப்பல் போக்குவரத்து!

Thoothukudi-Maldives

தூத்துக்குடி- மாலத்தீவு இடையே அக்டோபர் 1-ந்தேதி முதல் புதிய கப்பல் போக்குவரத்து தொடக்கங்கவுள்ளது. இது வாராந்திர அடிப்படையில், செலவு குறைந்த போக்குவரத்தாக இருக்கும் என கப்பல் போக்குவரத்து நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

'தி கோட்' திரைப்படத்திற்கு தியேட்டர் ஹவுஸ்புல்!

The Goat Movie

விஜய் நடித்துள்ள, 'தி கோட்'  திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னை PVR, சத்யம், ரோஹிணி உள்ளிட்ட தியேட்டர்களில், (நாளை) செப்டம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் திரைப்படத்தின் காட்சிகள் ஹவுஸ்புல் ஆனது.

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்  அணிகளின் பயிற்சியாளர் நியமனம்!

Brenton McCullum

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்  அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெகுல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் பூத்து, காலையில் உதிரும் தெய்வீக நறுமணம் கொண்ட பிரம்ம கமலம்!

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

SCROLL FOR NEXT