News 5 
செய்திகள்

News 5 – (04-09-2024) விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

கல்கி டெஸ்க்

பிரதமர் நரேந்திர மோடி, புருனே நாட்டு சுல்தானுடன் கலந்துரையாடல்!

Narendra Modi with Sultan King

இரண்டு நாள் பயணமாக நேற்று (செவ்வாய் கிழமை) புருனே சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

தூய்மை பணியாளர் வேலைக்கு பட்டதாரிகள் விண்ணப்பம்!

cleanliness worker job

ஹரியானா மாநில அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்திருந்த நிலையில், 6 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 40 ஆயிரம் இளங்கலை பட்டதாரிகள் உட்பட 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

TNPSC ஹால் டிக்கெட் வெளியீடு!

TNPSC

தமிழக அரசில், காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2A  முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியானது. 2,327 பணியிடங்களுக்கு செப்டம்பர் 14-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளதுTNPSC.

விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

The Goat Movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘THE GOAT' திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை ஒருநாள் மட்டும்  'தி கோட்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக திரையரங்குகளில் 4 காட்சி திரையிடப்படும் நிலையில், கூடுதலாக ஒரு காட்சி திரையிடப்படும்.

வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்!

Paralympics

பாராலிம்பிக்ஸ் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி,  2-ம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT