News 5 
செய்திகள்

News 5 – (04.10.2024) த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு!

கல்கி டெஸ்க்

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிதி ஒதுக்க ஒப்புதல்!

Metro

டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், இந்தத் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

திருப்பதியில் இன்று பிரம்மோத்ஸவம் துவக்கம்!

Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால், கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு!

TVK

மிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று விழுப்புரம் விக்கிரவாண்டியில் வேதமந்திரங்கள் முழங்க பூஜை போட்டு தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மாநாட்டிற்கான பந்தக்காலை நட்டு வைத்தார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த். பந்தக்கால் நட்ட கையோடு மாநாட்டுக்கான பணிகளையம் த.வெ.க. கட்சியினர் தொடங்கி உள்ளனர்.

‘தளபதி 69’ படத்தில் பிரகாஷ் ராஜ்!

'Thalapati 69' Movie

ச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 69’ படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டை தினமும் அப்படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அந்தப் படக்குழு அறிவித்துள்ளது.

மகளிர் டி20 கிரிக்கெட்: இந்தியா vs  நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

India vs New Zealand in women's T20 cricket series

9வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது.

நான்காம் நாள் - செல்வம் பெருக்குவாள் செல்வாம்பிகை!

சிறுகதை: முகம் தெரியாத முகம்!

முதன் முதலாக விமானம் ஓட்டியவர் ஓர் இந்தியர்! ரைட்டா, ராங்கா?

நல்லெண்ணெய் Vs தேங்காய் எண்ணெய்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

மிகவும் விலையுயர்ந்த அக்வாரியம் வகை மீன்கள்!

SCROLL FOR NEXT