மாலத்தீவுக்கு வருமாறு அதிபர் முய்சு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா - மாலத்தீவு இடையிலான 60 ஆண்டுகால நட்புறவையொட்டி அடுத்த ஆண்டு வருவதாக பிரதமர் மோடியும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும், இந்தியர்கள் அதிகளவில் மாலத்தீவுக்கு சுற்றுலா வர வேண்டும் எனவும் அதிபர் முய்சு அழைப்பு விடுத்துள்ளார். மாலத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெருமளவில் உதவி செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குஜராத் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் 23 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி, ‘தாம் பிரதமரான பிறகு 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மழை காரணமாக வரத்துக் குறைந்ததால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் உயர்ந்தது. இதனால் சில்லறை விற்பனைக் கடைகளில் 1 கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பா.விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் மற்றும் நடிகை ராஷிகன்னா நடிக்கும் ‘அகத்தியா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான 'டி-20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் மோதும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற 'பி' பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.