News 5 
செய்திகள்

News 5 – (14.10.2024) 'இட்லி கடை' படத்தில் இணைந்தார் நித்யா மேனன்!

கல்கி டெஸ்க்

ரத்தன் டாடாவுக்கு வைரக்கற்களால் அஞ்சலி!

Tribute to Ratan Tata with diamonds

றைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு வைரக்கற்களால் அஞ்சலி செலுத்தியுள்ளார் சூரத் நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர். 11,000 வைரக்கற்களை கொண்டு ரத்தன் டாடாவின் உருவத்தை வடிவமைத்து இவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னைக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் -  மீட்பு நடவடிக்கைகள் தயார்!

Rain

சென்னை பெருநகருக்கு நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கையும் நாளை மறுநாள் (ரெட் அலர்ட்) அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்குத் தயாராக உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மாநில மாநாட்டுப் பணிகளைத் துவங்கிய தவெக!

Vijay with Balaji

மிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க வரும்படி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சந்தனம், குங்குமம் வைத்து அழைப்பிதழ் கொடுத்து நடிகர் தாடி பாலாஜி நெல்லை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாளையங்கோட்டையில் பல்வேறு இடங்களுக்கு நடந்து சென்று அவர் அழைப்பிதழ் மற்றும் பிரசுரங்களை வழங்கியுள்ளார்.

'இட்லி கடை' படத்தில் இணைந்தார் நித்யா மேனன்!

Nithya Menon with dhanush

டிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் இணைந்தார் நித்யா மேனன். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தைப் போல ஒரு ஃபீல் குட் படமாகவே 'இட்லி கடை' திரைப்படம் உருவாகி வருகின்றதாம். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய் நடித்து வருகின்றார். அருண் விஜய் இப்படத்தில் நெகட்டிவான ரோலில் நடிப்பதாகத் தகவல்கள் வருகின்றன. மேலும், நாயகியாக நித்யா மேனனும், சப்போர்டிங் ரோலில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சிறந்த ஃபீல்டர் விருது பெற்ற வாஷிங்டன் சுந்தர்!

Washington Sundar

ங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT