மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்டியது மகாராஷ்டிரா மாநில அரசு. மகாராஷ்டிரா திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தின் பெயர், இனி, ‘ரத்தன் டாடா மகாராஷ்டிரா திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம்’ என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் ஆவின் மூலம் மக்களுக்குத் தடையின்றி பால் மற்றும் பால் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குடிநீர் விநியோகத்திற்காக போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று கனமழையும், நாளை மிக கனமழையும், 16ம் தேதியன்று அதிகனமழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ள நிலையில், சென்னை மக்கள் தங்கள் வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்து வருகின்றனர்.
சென்னையில் கனமழை காரணமாக நாளை முதல் 18ம் தேதி வரை தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கான ஐ.சி.சி. 'டி20' உலகக் கோப்பை 9வது சீசன் எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் நடைபெற்ற 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.