அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் 8 வயது மனிதக்குரங்கு ஒன்று, ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. லிம்பானி என பெயரிடப்பட்ட இந்த குரங்கு, பிறந்தது முதல் புளோரிடா மாகாண விலங்கியல் வனவிலங்கு அறக்கட்டளையில் வாழ்ந்து வருகிறது. இந்த ஓவியம் குறித்து அங்குள்ள ஊழியர்கள், அதன் பழக்கவழக்கம் மற்றும் குணநலன் மனிதர்களை போன்றே காணப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் அந்த மனிதக்குரங்கு வரைந்த ஓவியங்கள் விற்பனைக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக்ஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சொந்த ஊர் திரும்பினார். ஹரியானாவில் தனது சொந்த ஊரில் மக்கள் அளித்த உற்சாக வரவேற்புக்கு பின்னர் அவர், “ஒலிம்பிக்ஸில் தங்கம் கிடைக்கவில்லை என்றாலும், மக்கள் என்மீது காட்டும் அன்பும் மரியாதையும் 1000 தங்கப் பதக்கங்களுக்கு சமம்" என கூயுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சமூகவலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் வழங்கக்கோரி கோவை, திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களில் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த நாளையொட்டி கல்வி நிறுவனங்களில், விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த யு.ஜி.சி. வேண்டுகோள் விடுத்த நிலையில், நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில், வரும் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.