News 5 
செய்திகள்

News 5 – (17-08-2024) ‘KALKI 2898AD’ - OTT RELEASE!

கல்கி டெஸ்க்

ரஷ்யாவில் உள்ள சுட்ஜா நகரத்தை கைப்பற்றிய உக்ரைன்!

Ukraine captured Russia!

ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும், கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேல் போர் நடந்து வருகிறது. சமீபகாலமாக, ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதுடன், குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றி வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள சுட்ஜா என்ற நகரத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றி விட்டதாக, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால் மேலும் போர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குரூப் 2, 2A தேர்வு அறிவித்தபடி நடைபெறும் - TNPSC விளக்கம்!

Group 2, 2A Exam will be held as announced - TNPSC Explanation!

முதலில் செப்டம்பர் 14-ம் தேதி குரூப் 2, 2A தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன் TNPSC வெளியிட்ட அட்டவணையில், குரூப் 2, 2A  முதல்நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் 28- ம் தேதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், குரூப் 2, 2A தேர்வு அறிவித்தபடி செப்டம்பர் 14ம் தேதிதான் நடைபெறும் என TNPSC விளக்கம் அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்!

Thalapathy Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை வரும் 22-ம் தேதி அறிமுகம் செய்வதாக தவெக தலைவரும்  நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். கட்சியின் முதல் மாநாட்டை அடுத்த மாதம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

‘KALKI 2898AD’ - OTT RELEASE!

‘KALKI 2898AD’

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘கல்கி 2898AD' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வரும் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. NETFLIX-ல் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது.

தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்குமா?

Will CSK retain Dhoni

ஒரு வீரர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால் அந்த வீரரை Uncapped பிரிவில் சேர்க்கும் விதியை பிசிசிஐ மீண்டும் கொண்டுவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விதி அமலுக்கு வந்தால், தோனியை ஒரு Uncapped பிளேயராக சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த விதி, 2008 முதல் 2021 வரை நடந்த ஐபிஎல் தொடர்களில் கடைபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT