News 5 
செய்திகள்

News 5 – (17.09.2024) விக்கிப்பீடியாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கல்கி டெஸ்க்

சீனாவில் புதிய லேசர் தகவல் தொழில்நுட்ப மையம்!

china

சீனாவில், செயற்கைக்கோள் மூலம் அதிக டேட்டாக்களை விரைவாகப் பகிரும் வகையில், புதிய லேசர் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோவேவ் தகவல் பரிமாற்ற முறையை விட ஆயிரம் மடங்கு அதிக திறனுடன் செயல்படும் என்று சீனாவின் ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விக்கிப்பீடியாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Supreme Court, Wikipedia

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை விக்கிப்பீடியா வெளியிட்டதால், உடனடியாக அதை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுபவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என இந்திய சட்ட விதியில் தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இன்ஸ்டாகிராம் போல் இனி வாட்ஸ் அப் - புதிய அப்டேட்!

Whatsapp

ன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட நபர்களை Mention செய்யும் வசதியை போல, இனி வாட்ஸ் அப்பிலும் அறிமுகப்படுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

விரைவில் ‘லால் சலாம்’ படத்தின் புதிய வெர்ஷன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Lal Salaam - Aishwarya Rajinikanth

ஸ்வர்யா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில், "லால் சலாம் படப்பிடிப்பின்போது 'ஹார்ட் டிஸ்க்' ஒன்று தொலைந்து விட்டது. அதனால் அப்படத்துக்காக அதிகம் செலவு செய்யப்பட்டது. ஆகையால், படத்தை நினைத்தபடி எடுக்க முடியவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது காணாமல் போன ஹார்ட் டிஸ்க் கிடைத்திருப்பதாகவும், ‘லால் சலாம்’ திரைப்படத்தின் புதிய வெர்ஷனாக இது இருக்கும் எனவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் இயக்குநர், ‘இந்த வெர்ஷன் விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்றும், முன்பு வெளியான 'லால் சலாம்' படத்தின் வெர்ஷனை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.

‘கே.எல்.ராகுல் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்’: - ரோஹித் சர்மா!

KL Rahul, Rohit Sharma!

ங்கதேசம் - இந்திய அணிக்கு இடையே வரும் 19ம் தேதி சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, புதிதாக ஆர்.சி.பி அணியில் இணைந்த கே.எல்.ராகுல் பற்றி கூறியுள்ளார். அவர் கூறும்போது, "எல்லோரது வாழ்விலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். கே.எல்.ராகுல் மிக நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடிய வீரர். தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் நன்றாக விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

Ind Vs Bang: சேப்பாக்கத்தில் இதுதான் அஸ்வினுக்கு கடைசி போட்டியா? வெளியான தகவல்!

தங்கத்தால் சாதிக்க முடியாததை சங்கத்தால் சாதிக்க முடியும்!

வெடித்து சிதறிய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அதிர்ந்தது லெபனான்!

முன்னேறியவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டே இருப்பார்கள்!

ஆங்கிலேயர்களை அதிரவைத்த கம்பீரமான களரிப்பயட்டின் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT