News 5 
செய்திகள்

News 5 – (17.10.2024) ரயில் டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் குறைப்பு!

கல்கி டெஸ்க்

ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய மெட்டா நிறுவனம்!

Meta Company

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் பிரிவு அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது மெட்டா நிறுவனம். இது நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் குறைப்பு!

train ticket

‘ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம், 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது’ என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் எந்த மாற்றமுமில்லை எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அம்மா உணவகத்தில் ஒரே நாளில் 1 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு இலவச உணவு விநியோகம்!

Amma unavagam

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையையொட்டி பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதையடுத்து, கடந்த 2 நாட்களில் அம்மா உணவகம் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 11 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு இலவச உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதில் அம்மா உணவகங்களில் நேற்று மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

'Bloody Beggar' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

'Bloody Beggar'

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகி வரும் 'Bloody Beggar' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி!

All out Indian team!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. ஆல் அவுட்டானதன் மூலம் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதன் மூலம் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணி!

இரவில் பூத்து, காலையில் உதிரும் தெய்வீக நறுமணம் கொண்ட பிரம்ம கமலம்!

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

SCROLL FOR NEXT