News 5 
செய்திகள்

News 5 – (20.09.2024) த.வெ.க. முதல் மாநாடு தேதி அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அமெரிக்கா உறுதி!

United States, President Zelensky

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இதுவரை எந்த உருப்படியான தீர்வும் ஏற்படவில்லை. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது, ”ரஷ்யா உடனான போரில் வெற்றி பெறும் வரை உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவோம்” என அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உறுதி அளித்துள்ளனர்.

பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது!

Passport

ந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 20) இரவு 8 மணி முதல் செப்டம்பர் 23 காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வது முதல் அனைத்து பணிகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்தபின் பாஸ்போர்ட் சேவைக்கான இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு!

TVK

மிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ல் விக்கிரவாண்டியில் நடைபெறும் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். "நம்மை வழிநடத்தப்போகும் கொள்கைகளையும், நாம் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாக இந்த மாநாடு கொண்டாடப்படும்" எனவும் அவர் கூறியுள்ளார்.

‘வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது படக்குழு!

Vetayan movie

‘வேட்டையன்’ படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தில் உள்ள கலைஞர்களின் கதாபாத்திரப் பெயர்களை அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் விளம்பரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துஷ்ரா விஜயன், ரித்திகா சிங், ஃபஹத் பாசில் மற்றும் ராணா டக்குபதி ஆகியோரின் பெயர்களை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் இறுதியாக அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர்.

அஸ்வின் சதம் அடிக்க நெகிழ்ச்சியான காரணம் உள்ளது!

Ravi Ashwin

ந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. இந்த நிலையில் அஸ்வின் சென்னை சேப்பாக்கத்தில் சதம் அடித்து அசத்தினார். இவரது சிறப்பான இந்த ஆட்டத்திற்கு பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காரணம் சொல்லப்படுகிறது.

தற்போது 38 வயதாகும் அஸ்வின் இந்த 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவே அஸ்வின் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் இருக்கலாம். தனது சொந்த மண்ணில் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இருந்ததால்தான் அபாரமாக ஆடி சதம் அடித்து இருக்கிறார் என ரசிகர்கள் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்க உதவும் 9 வகை உணவுகள்!

ஆந்திரா ஸ்பெஷல் கத்தரிக்காய் ரசம் செய்யத் தெரியுமா? 

சோபியா லோரன் - உலகின் அழகிய பெண் எனும் சிறப்பு பெற்ற இத்தாலிய நடிகை!

How to Make a Yummy Indian Sweet Dessert - ‘Coconut Ladoo’

சரும ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? 

SCROLL FOR NEXT