ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மூலம் விபத்து காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். ரூபாய் 239, ரூபாய் 399, ரூபாய் 969 ரீசார்ஜ்களுக்கு காப்பீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழப்போருக்கு 1 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு 25,000 ரூபாய் காப்பீடு தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஷ்வர், கொல்கத்தா மார்க்கமாக செல்லும் 350 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ஒன்றுக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் வீதம், ரயில்வேக்கு மொத்தம் 52 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, சொமேட்டோவில் பிளாட்பார்ம் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆர்டருக்கும் 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி.
விக்கிரவாண்டியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள த.வெ.க. கட்சி மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் சி.சி.டி.வி. வாயிலாக கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. குடிநீர், கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் உட்பட, தமிழக முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் விஜய் மாநாட்டிற்காக புக்கிங் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லயனை (530 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி 531 விக்கெட்டுகள் எடுத்து, 7வது இடத்துக்கு முன்னேறினார் ரவிசந்திரன் அஸ்வின்.