அமெரிக்க அதிபருக்கான போட்டியில், கமலா ஹாரிஸை நூலிழையில் முந்துகிறார் டொனால்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடும் டிரம்பிற்கு 47 சதவிகிதம் பேரும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு 45 சதவிகிதம் பேர் ஆதரவு உள்ளதாக ஆய்வில் கண்டறிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது டெல்லி அரசு. அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த ஹெல்ப் லைன்களை அமைக்கவும் பள்ளிகளுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் ஞாயிறன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் பகுதி நேர ரேஷன் கடைகளும், நாள் முழுவதும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கஜினி’ திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியில் அமீர்கானும், தமிழில் சூர்யாவும் நடித்து ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டியானது அஹமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது. இந்தப் போட்டியின் இறுதியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.