செய்திகள்

அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஏமாற்றி ஒப்பந்தம் போட்ட நித்தியானந்தா!

கிரி கணபதி

ந்தியாவில் பல சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி கைலாசா என்ற தனி நாடு உருவாக்கிவிட்டதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சமீபத்தில் கைலாச நாடு அமெரிக்காவின் பல நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

நம் நாட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நித்தியானந்தா!! பின்னர் பாலியல் புகார்களில் மாட்டிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு பிணையில் வெளிவந்து திடீரென்று காணாமல் போய்விட்டார். எங்கே சென்று விட்டார் என அனைவரும் தேடி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக நான் புதியதாக கைலாச என்ற நாட்டை உருவாக்கிவிட்டேன் என்று இணையத்தில் காணொளி வெளியிட்டு அனைவரையும் குழப்பமடையச் செய்தார்.  

அந்த கைலாசம் என்ற நாடு எங்கே இருக்கிறது என யாருக்குமே தெரியாது. ஈக்வேட்டார் பகுதியில் ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டுவிட்டார் என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் இதை யாருமே உறுதியாக கூற முடியவில்லை. கைலாச நாட்டிற்கென தனி நாணயம், கொடி, வெளியுறவுத்துறை உள்ளிட்ட அனைத்தையும் அறிவித்து, இங்கே குடியுரிமை பெற நீங்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று மேலும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். 

இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 'சிஸ்டர் சிட்டி' என்ற ஒப்பந்தத்தை கைலாசா நாட்டுடன் போட்டுக்கொண்டது. ஆனால் கைலாசா என்ற ஒரு நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது என்ற விஷயம் அமெரிக்காவுக்கு தெரியாது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி கைலாசா மற்றும் நியூயார்க் நகரத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

அமெரிக்காவின் மிக முக்கிய நகரமான நியூயார்க் எப்படி ஒரு போலி நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதன் பிறகு உண்மையை அறிந்த நியூயார்க் நகரம் போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்தது. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், அமெரிக்கா முழுவதும் இருக்கும் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் இதே போன்று "சிஸ்டர் சிட்டி" ஒப்பந்தம் கைலாச தரப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

போலியான ஒப்பந்தங்கள் போட்டு,  அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டால், கைலாசா அங்கீகரிக்கபட்ட நாடு என்பதாக அனைவரும் நம்பி விடுவார்கள் என நித்தியானந்தா நினைத்தார் போல. 

இதில் இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கிறது, ஏதோ உள்ளூர் நிர்வாகம் மட்டும் கைலாசாவிடம் ஏமாறவில்லை. தலைவன் நித்தியானந்தா அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருக்கும் இருவரைக் கூட ஏமாற்றியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் இருவர் கைலாசா நாட்டிற்கு சிறப்பு அங்கீகாரத்தை அவர்கள் கைப்பட வழங்கியுள்ளார்கள். 

இந்த விவகாரம் சார்ந்து இனிவரும் நாட்களில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT