செய்திகள்

2024 தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி இல்லை: பா.ஜ.க. தலைவர் பொம்மை!

ஜெ.ராகவன்

வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வது குறித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் எந்த பேச்சும் நடத்தவில்லை என்று பா.ஜ,க, மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். இனி வரும் காலங்களில் அரசியலில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் பேசப்படுகின்றன. உண்மையில் அப்படி எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் பா.ஜ.க. ஈடுபடவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணிவைத்து போட்டியிடலாம் என்று பரவலாக பேசப்படுகின்றன. மேலும் இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி, சமீபத்தில் புதுதில்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக குமாரசாமியிடம், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ளுமா என்று கேட்டதற்கு, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தேவைப்பட்டால் தேர்தல்

கூட்டு வைத்துக்கொள்வது பற்றி யோசித்து முடிவு செய்யப்படும் என்று குமாரசாமி கூறியிருந்தார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 இடங்களில் 25 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. சுயேச்சை ஒரு தொகுதியில் வென்றார், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றது.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT