இனி ட்ரைவிங் லைசன்ஸை ஆர்டிஓ அலுவலகத்திலோ அல்லது ட்ரைவிங் ஸ்கூலிலோ வாங்கத் தேவையில்லை. ஏனெனில் ட்ரைவிங் லைசன்ஸை ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்கள் வீட்டிற்கே கொண்டு வரும் புதிய சட்டத்தைத் தமிழகப் போக்குவரத்துத் துறை கொண்டுவந்துள்ளது.
ஆர்டிஓ அலுவலகத்தில் இனி வாகனம் சம்பதப்பட்ட எந்த ஆவணங்களையும் வாங்க முடியாது. எப்படி நமது பாஸ்போர்டை காவலர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்துக் கொடுத்து கையொப்பம் வாங்கிக்கொள்கிறார்களோ, அதேபோல் இனி ட்ரைவிங் சம்பதப்பட்ட ஆவணங்களும் போஸ்ட் மூலம் தான் வரும்.
உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ட்ரைவிங் லைசன்ஸ் வேண்டுமென்றால், ஆன்லைனில் அரசங்காத்தின் Vahan அல்லது Sarathy மூலமாக அப்ளை செய்ய வேண்டும். பின் ஒருநாள் உங்களுக்கு ட்ரைவிங் டெஸ்ட் நடத்துவார்கள். அதில் கலந்துக்கொண்டு தேர்ச்சிப் பெற்றப் பட்சத்தில் ஒருநாளைக்குப் பிறகு ஸ்பீட் போஸ்ட் மூலம் வீடுத் தேடி வந்து உங்களுக்கு லைசன்ஸ் வழங்கப்படும்.
இந்தச் சட்டத்தால் ஆர்டிஓ மற்றும் ட்ரைவிங் ஸ்கூலில் வாங்கும் லஞ்சங்களை ஒழிக்க முடியும். அதேபோல் அழைந்துத் திரிய வேண்டிய அவசியம் இல்லை. இதனை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமைத் தொடங்கி வைத்தார். அதேபோல் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் கமிஷ்னர் சண்முத சுந்தரம், அனைத்து ஆர்டிஓ அலுவலகத்திற்கும் அப்பிளிக்கண்ட்களின் விவரங்களைச் சேர்க்கும்படி கட்டளையிட்டிருக்கிறார். இதன்மூலம் பதிவு செய்தவர்களின் செல்போன்களுக்கு எதாவது போஸ்ட் அனுப்பி வைத்தாலோ அல்லது இதுத்தொடர்பான செய்திகளை அனுப்ப வேண்டுமென்றாலோ மெசேஜ் அனுப்பப்படும்.
போஸ்ட் கொண்டுவரும் போது நீங்கள் வீட்டில் இல்லையென்றால் மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்திற்கே அந்த போஸ்ட் சென்றுவிடும். பின்னர் நீங்கள் உங்களின் சுய விவரங்களை எழுதிய ஒரு என்வலப் கவரை ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தால் மட்டுமே அந்த ட்ரைவிங் லைசன்ஸ் போஸ்ட் மீண்டும் உங்கள் வீட்டிற்கு வரும். மாதம் 5 லட்சம் போஸ்ட் டெலிவரி செய்ய போக்குவரத்து காவல்துறைத் திட்டம் செய்துள்ளது.