செய்திகள்

இனி “மஞ்சப்பை” தானாம் ! மாநகராட்சி பட்ஜெட்டில் சுகாதாரத் துறை திட்டங்கள்!

கல்கி டெஸ்க்

இன்று சென்னை மாநகராட்சியின் 2023 - 2024 ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் சுகாதாரத் துறைக்கு மட்டும் 8 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

நெகிழி மீதான தடையை தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டம், சுய உதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். பொது மக்களின் வரவேற்பு மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்து கோட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்தி கொள்ள ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு.

சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு தடுப்புப் பணிகளைச் செய்யும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தரமான Vector Control Kit கொள்முதல் செய்து வழங்கப்படும்.

சென்னை மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள், ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள், ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலும் கொள்முதல் செய்யப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு வரப்படும்.

> மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் (Communicable Disease Hospital) சென்னை மாநகரின் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

2023-2024ம் ஆண்டில் இந்த ஆண்டு, 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர அங்கீகாரச் சான்றிதழ்கள், National Quality Assurance Standards (NQAS) என்ற நிறுவனத்திடமிருந்து பெற்று தரப்படும்.

2023-2024-ஆம் நிதியாண்டில், ஷெனாய் நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில், ரூ.1 கோடி மதிப்பில் இரண்டு டயாலிசிஸ் மையங்கள் முதற்கட்டமாக 10 இயந்திரங்களுடன் நிறுவப்படும்.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT