செய்திகள்

அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி!

கல்கி டெஸ்க்

ணு ஆயுதங்களைச் தாங்கிச் செல்லும் நவீன, ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் இருக்கும் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) நேற்று இரவு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஏவுகணை பரிசோதனையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாகச் செயல்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

இது சம்பந்தமாக தெரிவிக்கப்பட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், ‘ஏற்கெனவே மூன்று முறை சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்ட இதுபோன்ற ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத் தன்மை ஆகியவை உறுதி செய்யப்படுவதற்கு, ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு, முதன் முறையாக இந்த இரவு நேரப் பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஏவுகணையின் செலுத்து பாதை முழுவதும் பல்வேறு இடங்களில் ராடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இழை கண்காணிப்பு செயல்முறை போன்றவை அமைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் தளபதிகள் ஆகியோர் இந்த வெற்றிகரமான அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டு உள்ளனர்.

இந்த வெற்றிகரமான, ‘அக்னி பிரைம்’ ஏவுகணையின் பரிசோதனைக்காகவும், சிறப்பான செயல்பாட்டுக்காகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராணுவத்தினரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி இருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT