யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்  
செய்திகள்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு - உ.பி. முதல்வர் கருத்து!

ஜெ.ராகவன்

இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்ட பிறகே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக அரசு தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசு வெளியிட்ட வரைவு அறிவிக்கையை தள்ளுபடி செய்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட முதல்வர் ஆதித்யநாத், “இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய ஒரு கமிஷன் அமைக்கப்படும். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி மூன்று விதமான உத்திகள் பின்பற்றப்படும். அதன் பிறகே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க மாநில அரசுகள் கமிஷன் அமைக்க வேண்டும். இதர பிற்பட்ட வகுப்பினர் எவ்வளவு பேர் என்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளாகும். எனினும் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது.

அனைத்து சட்ட நுணுக்கங்களையும் பரிசீலித்த பின் தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அரசு தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

கோடைக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள்!

ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர் - தெரிந்ததும் தெரியாததும்!

Wearable AC: சோனி நிறுவனத்தின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!

மனப் பந்தை மகிழ்ச்சியை நோக்கி நகர்ந்துங்கள்!

SCROLL FOR NEXT