செய்திகள்

தொடரும் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளைகள்...!

கல்கி டெஸ்க்

கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியதால், வார இறுதி நாட்களில் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. கோடை விடுமுறை நாட்களிலும் , பண்டிகை நாட்களிலும் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அந்த நாட்களில் அதிக கட்டணத்தை உயர்த்தி விடுகிறார்கள் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்.

சில பயணிகள் ஆம்னி பேருந்துகளில் விலை அதிகமாக இருந்தாலும், ரயில்களில் பயணிப்பதை விட வசதி அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனாலும் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் கடுமையாக உயர்த்தி இருந்தாலும் அதனை மக்கள் நாடுகிறார்கள். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவ்வப்போது இந்த பிரச்சைனைகள் எழுவது வாடிக்கையாகி வருகிறது எனலாம்.

கோயம்புத்தூர் மற்றும் சென்னை இடையேயான ஆம்னி பஸ் கட்டணம் வழக்கமாக 750 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை இருக்கும் என்ற நிலையில் வார இறுதி நாட்களில் 1,000 ரூபாய் முதல் 1,900 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மதுரை மற்றும் சென்னை இடையேயான தனியார் பேருந்துகளின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்து ரூ.1,300 முதல் ரூ.4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மற்றும் மதுரை இடையேயான பேருந்து கட்டணமும் இருமடங்கு அதிகரித்து 1,200 ரூபாயாக உள்ளது. கோவை மற்றும் நெல்லை இடையே வழக்கமாக 700 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.தற்போது, 1,530 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளில் 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை பொதுமக்களை வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு தங்கள் இஷ்டம் போல ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ஆம்னி பேருந்து கட்டண கொள்ளைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு அறிவித்ததாலும், பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கோடைக்காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?

சுற்றுச்சூழலை பராமரிக்கும் சதுப்பு நிலங்கள்! 

மனச்சோர்வு இருப்பதைக் கண்டறியும் வழிகள்!

Birthday Special: ரவீந்திரநாத் தாகூரின் 16 பொன்மொழிகள்!

மண்ணின் வளத்தை மேம்படுத்த உதவும் பசுந்தாள் உரப் பயிர்கள்!

SCROLL FOR NEXT