செய்திகள்

ஒராங்குட்டான் குரங்குகளால் பீட் பாக்ஸர்கள் போல ஒலிகளை உருவாக்க முடியும்.

கிரி கணபதி

சில பாட்டுப் பாடும் பறவைகள் மற்றும் மனித பீட் பாக்ஸர்கள் போலவே ஒராங்குட்டான் குரங்குகளாலும் ஒரே சமயத்தில் இரண்டு வித்தியாசமான ஒலிகளை எழுப்ப முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

ஒரு தனி நபரின் திறமைக்கு ஏற்ப, அவர் எந்த அளவுக்கு நுட்பமாக பயிற்சி செய்துள்ளாரோ, அந்த அளவுக்கு பிறரை ஈர்க்கக்கூடிய மிகவும் கடினமான திறன் தான் பீட் பாக்சிங். இது வாயிலிருந்து மிகவும் கடினமான மற்றும் வித்தியாசமான ஒலிகளை எழுப்புவதாகும். பல கலைஞர்கள் இதில் ஒரே சமயத்தில் இரு விதமான ஒலிகளை எழுப்பும் திறன் படைத்திருப்பார்கள். இதைக் கேட்பதற்கே வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். மனிதர்கள் பீட் பாக்ஸிங் செய்வது போலவே, ஒராங்குட்டான் குரங்குகளாலும் செய்ய முடியும் என வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு குறித்த கட்டுரை PNAS Nexus என்ற இதழில் வெளியிடப்பட்டது. அதாவது, ஒராங்குட்டான் குரங்குகளால் சில பாட்டுப் பாடும் பறவைகள் போலவும், மனித பீட் பாக்ஸர்கள் போலவும் ஒரே நேரத்தில் தனித்தனியான ஒலிகளை உருவாக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பு, மனிதர்கள் பேசும் தன்மையின் பரிணாம வளர்ச்சியானது எப்படி இருந்திருக்கும் என்பதற்கான விளக்கத்தை அறிய உதவும். பீட் பாக்ஸிங் செய்யும் நபர்கள் உதடுகள், நாக்கு மற்றும் தாடை ஆகியவற்றை பயன்படுத்தி வித்தியாசமான ஒலிகளை உருவாக்கு கிறார்கள். அதே நேரத்தில் குரல்வளையிலுள்ள குரல் மடிப்புகளை, வெளியேறும் காற்றுக்கு ஏற்ப அழுத்தியும் ஒலி எழுப்புகிறார்கள் என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

ஆராய்ச்சியாளர்கள், போர்னியா மற்றும் சுமத்ராவில், சுமார் 3800 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒலி எழுப்பிய ஒராங்குட்டான் குரங்குகளின் இரண்டு குழுக்களை கவனித்ததில், அந்த இரு குழுக்களும் ஒரே மாதிரியான குரல் திறனைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தனர். உதாரணமாக போர்னியாவில் உள்ள பெரிய ஆண் ஓராங்குட்டான்கள் சண்டையிடும்போது, 'முணுமுணுப்பது' போன்ற சத்தத்தை எழுப்புகிறது. அதேபோல சுமத்ராவில் உள்ள பெண் ஓராங்குட்டான்கள், வேட்டையாடும் மிருகம் வருகிறது என்பதை எச்சரிக்க, முத்தமிடுவது போன்ற 'கீச்' சத்தத்தை உருவாக்குகிறது. பறவைகளின் குரல் திறன்களுடன் ஒப்பிடுகையில், ஒராங்குட்டான் குரங்குகளின் குரல் கட்டுப்பாடு ஒருங்கிணைப்புத் திறன்கள் குறைத்து மதிப்பிடப் படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 

ஒராங்குட்டான்களும் மனிதர்களும் பொதுவான மூதாதையர்களைப் பகிர்ந்துகொள்வதால், அவற்றிற்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதன் காரணமாகவே மனிதர்களைப் போலவே ஒராங்குட்டான் குரங்குகளாலும் பீட் பாக்ஸிங் ஒலி எழுப்ப முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT