செய்திகள்

ஒரே தேதியில் பிறந்து பாகிஸ்தான் குடும்பத்தினர் உலக சாதனை!

ஜெ.ராகவன்

பாகிஸ்தானில் லர்கானா என்னும் இடத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தனித்துவமான உலகசாதனை படைத்துள்ளனர். அவர்கள் செய்த சாதனை என்ன தெரியுமா? குடும்பத்தில் உள்ள 9 பேரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒரே நாளில் பிறந்தவர்கள்.

கின்னஸ் உலக சாதனை பதிவின்படி குடும்பத்தில் மொத்தம் 9 பேர் உள்ளனர். அதாவது தந்தை அமீர் அலி, தாய் குதிஜா மற்றும் 19- முதல் 30 வயது வரையிலான 7 குழந்தைகள். சிந்து, பெண் குழந்தைகளான இரட்டையர்கள் ஸாசுய் மற்றும் சப்னா, ஆமீர், அம்பர் மற்றும் ஆடவர் இரட்டையர்கள் அம்மர் மற்றும் அஹ்மர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி பிறந்தவர்கள். ஒரே தேதியில் பிறந்த குடும்பத்தினரில் இது ஒரு உலக சாதனையாகும்.

இந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மற்றொரு சிறப்பு அம்சம் உள்ளது. அமீர் மற்றும் குதிஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிதான். 1991 ஆம் ஆண்டு தங்களுடைய பிறந்த நாளிலேயே அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அதாவது மூத்த மகள் பிறப்பதற்கு சரியாக ஒரு வருடம் முன்னதாக திருமணம் செய்துள்ளனர்.

முதல் குழந்தை சிந்து 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்தது குறித்து அமீர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து குழந்தைகளும் ஆகஸ்ட் ! ஆம் தேதி பிறந்தது அவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது கடவுள் கொடுத்த பரிசாகவே அவர்கள் கருதுகின்றனர்.

இதில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றார்ல எந்த குழந்தையும் முன்கூட்டி பிறக்கவில்லை. சிசேரியன் மூலம் பிரசவிக்கவிலை. அனைத்து குழந்தைகளும் பிரசவ வலி எடுத்துத்தான் பிறந்துள்ளன.

நான் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. எல்லாம் இயற்கையாக நடந்தது. எல்லாம் கடவுள் செயல் என்கிறார் அமீர்.

அதேபோல இரட்டை குழந்தைகள் பிறப்பது எப்போதாவதுதான் நிகழும். ஆனால், அமீர் வீட்டில் இரண்டு முறை இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அம்மர் மற்றும் அஹ்மர் ஆகிய இரு ஆண் இரட்டையர்களும் 2003 ஆம் ஆண்டில் பிறந்துள்ளனர். அதாவது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.

முன்பு நாங்கள் எங்களது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவோம். ஆனால் இப்போதெல்லாம் மகிழ்ச்சியுடன் சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுகிறோம் என்றார் ஸாசுய்.

9 குழந்தைகள் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடினாலும் ஒரே ஒரு கேக் வெட்டி பகிர்ந்து கொள்கின்றனர். தனித்தனியாக கேக் வெட்டுவதில்லை.

மங்கி குடும்பத்தினர் அடுத்த மூன்று வாரங்களில் பிறந்தநாளை கொண்டாடவிருக்கின்றனர். இதில் விசேஷம் என்ன வென்றால் குதிஜா 50 வது பிறந்தநாளையும், மகன் அம்பர் 21 வது பிறந்தநாளையும் கொண்டாட இருக்கின்றனர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT