சபரிமலை ஐயப்பன் கோயில் 
செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!

கல்கி டெஸ்க்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். பங்குனி உத்திர விழா இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பங்குனி உத்திர விழாவிற்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும்

லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயில்

தேவஸ்தான அறிக்கையில், ”சபரிமலை கோயிலில் நேற்று மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்தார் . அன்றிலிருந்து 10 நாட்களுக்கு ஏப்ரல் 5-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி இன்று ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என தெரிவித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி பம்பையில் நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.

இந்த பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT