Vijay 
செய்திகள்

விஷ கள்ளச்சாராய விவகாரம்: “இது அரசு நிர்வாகத்தின் அலட்சியம்” – தவெக தலைவர் விஜய்!

பாரதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதற்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனையடுத்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கூட தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை கூடுவதால், சில தலைவர்கள் நேரில் சந்தித்து குடும்பத்தினரிடம் வேதனை தெர்வித்து வருகின்றனர். தற்போது உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரிக்கவுள்ளார்.

அந்தவகையில் தவெக தலைவர் விஜய், அரசுக்கு கண்டனம் தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து அதிரடி சோதனை நடத்த தன்னுடைய மாவட்ட காவல்துறைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறார் புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே. மற்ற மாவட்ட எஸ்.பிக்களும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 24 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT