செய்திகள்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக பொறுப்பேற்ற பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா!

கல்கி டெஸ்க்

நாட்டில் லஞ்சம், ஊழல்களுக்கு எதிரான தன்னாட்சி அமைப்பாகச் செயல்படுகிறது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். ஜனநாயகத்தைக் காப்பதில், மத்திய தகவல் உரிமைச் சட்டத்தைக் காக்கும் மத்திய தகவல் ஆணையத்தைப் போலவே இந்த ஆணையமும் ஊழல்களுக்கு எதிராக முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராகப் பொறுப்பில் இருந்த சுரேஷ் என்.பட்டேலின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து பொறுப்பு ஆணையராகப் பதவி வகித்து வந்த பிரவீண் குமார் ஸ்ரீ வத்சவா இன்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் (சிவிசி) தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற இந்தப் பதவி ஏற்பு விழாவில் பிரவீண் குமார் ஸ்ரீ வத்சவாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT