செய்திகள்

ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு !

கல்கி டெஸ்க்

மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் கோவையில் ஈஷா யோகா மையத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருவது அறிந்ததே. கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திரெளபதி முர்மு அழைக்கப்பட்டதையடுத்து இவ்விழாவிற்காக முதல் முறையாக அவர் தமிழகம் வருகிறார்.

அந்த வகையில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பிரபலங்களும் ஏராளமான பொது மக்களும் வருடந்தோறும் கலந்து கொள்வதும் வழக்கமான ஒன்று.

மகா சிவராத்திரி விழாவுக்கு வெளிநாடுகளிலிருந்தெல்லாம் பக்தர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வைத்து கலந்து கொள்வது வழக்கம். இந்த விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பாக நடைபெறும். இவ்விழா ஈஷா யோகா மையத்தில் தொடர்ந்து கடந்த 28 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திரவுபதி முர்மு

இதைத்தவிர சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட 32 இடங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாப்பட உள்லது. கோவையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமே கான், பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மகா சிவராத்திரி விழாவிற்காக

குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT