பிரதமர் மோடி  
செய்திகள்

#BREAKING: சட்டம், ஒழுங்கு மாநிலத்தின் பொறுப்பு ! பிரதமர் மோடி உரை!

கல்கி டெஸ்க்

ஹரியானா மாநிலம் சூரஜ்கோட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துக் கொண்டனர். தமிழ்நாடு சார்பாக சட்ட அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தீவிரவாத குற்றங்களை தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு. அதற்காக வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது என்று பேசியுள்ளார்.

அமித்ஷா

கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி கட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "தேசத்தைக் கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சமப்பொறுப்பு இருக்கிறது. சட்டம், ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. அதேசமயம், இது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT