செய்திகள்

PS 2 "வீரா ராஜ வீரா" பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியானது!

கல்கி டெஸ்க்

"வீரா ராஜ வீரா" பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக எடுக்கப்பட்டது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் , மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல மொழிகளில் இம்மாதம் வரும் 28ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

தென்னிந்தியா சினிமாவில் மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம் . இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில்"அகநக "பாடலை தொடர்ந்து இன்று "வீரா ராஜவீரா" என்னும் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக நேற்றைய தினம் படக்குழு தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது.

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT