மெரினா நடைபாதை  
செய்திகள்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழியில் பொதுமக்கள் பயணம்!

கல்கி டெஸ்க்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதை பணி முடிந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதநிலையில் கடல் அழகை அருகில் சென்று ரசிப்பது எப்போது என ஏக்கத்தில் உள்ளனர்.

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடலை நேரில் சென்று ரசிக்கும் வகையில் 1.09 கோடி ரூபாய் செலவில் நிரந்தர பாதை அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து உள்ளநிலையில் இது இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் இதுவும் பொதுமக்கள் செல்லும் பாதையாகி விடுமோ என அச்சப்படுகின்றனர்

கடந்த மாதமே இந்த பாதை மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், சிறு சிறு வேலைகள் முடியாததாலும் பருவமழை காரணத்தாலும் இந்த பாதை திறக்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கான மெரினா நடைபாதை

இந்த பாதை முழுவதும் மரத்தால் செய்யப்பட்டு உள்ளது. 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் இப்பணி நடைபெற்றது. சென்னை பல்வேறு இடங்களில் சாலைகளில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளநிலையில் இந்த பாதையும் மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

அதுபோல் இந்த நடைபாதை மாறிவிடாமல் இருக்க நடைவேடிக்கை எடுக்க வேண்டுமென்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT