செய்திகள்

3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்த சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்ற ராஜேஷ்தாஸ்!

எல்.ரேணுகாதேவி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தீர்ப்பை வழங்கிய சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்றுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்த ராஜேஷ்தாஸ், பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கில், நீதிபதி புஷ்பராணி வழங்கிய தீர்ப்பில், பெண் எஸ்.பி-க்கு ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்றும், மேலும் 20,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூபாய் 500 விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். ஆனால், தீர்ப்பு அளிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த டிஜிபி ராஜேஷ்தாஸ் மனுவை விசாரித்த நீதிபதி, டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு ஜாமின் வழங்கியும் 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT