செய்திகள்

ராஜீவ் காந்தி நினைவு தினம்: ராகுலின் சென்னை வருகை திடீர் ரத்து!

கல்கி டெஸ்க்

ந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத் ரத்னா ராஜீவ் காந்தியின் நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தையொட்டி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று வருகை தந்திருக்கும் ராகுல் காந்தி, நாளை காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காலை 8 மணிக்கு நடைபெற உள்ள நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தவிர்க்க முடியாத சூழலால் ராகுல் காந்தியின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., முன்னிலையில் ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT