மெரினா கடற்கரை 
செய்திகள்

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதை சீரமைப்பு!

கல்கி டெஸ்க்

மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் சென்று வர அமைக்கப்பட்ட சிறப்பு மரப்பாதை, சமீபத்தில் தாக்கிய மாண்டஸ் புயலால் சேதமடைந்தது. இப்போது அந்த பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ.1.14 கோடி செலவில் மரத்தினாலான சிறப்புப் பாதை கடந்த 27ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் 9-ம் தேதி சென்னையைத் தாக்கிய மாண்டஸ் புயல் காரணமாக அந்த சிறப்புப் பாதை சேதமடைந்தது.

அப்போது அதை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்த சிறப்புப் பாதை சீரமைக்கப்பட்டு, விரைவில் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தாா். மேலும் அந்தப் பாதையில் யாரும் பயணிக்க முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சீரமைப்புப் பணிகள்  முடிவடைந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த சிறப்புப் பாதை இன்றுமுதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

SCROLL FOR NEXT