நாட்டில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 5.9 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் மேலும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக தவணை கடன் வாங்கிய மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் மேலும் இதன் மூலம் வீட்டு லோன், தனி நபர் லோன், வாகனங்கள் லோன் ஆகியவைகளின் வட்டி விகிதம் உயரும். ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீட்டுக்கு வட்டி விகிதம் உயரும் என்பதால் முதலீட்டாளர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு மகிழ்ச்சி அளித்துள்ளது.