சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுகாக புதிதாக உருவாக்கப்பட்ட பிரத்யேக பாதையை மற்றவர்கள் உபயோக படுத்தாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கு கடல் அலைகளை ரசிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக 1.14 கோடியில் மரப்பலைகளால் பாதைகள் உருவாக்கப் பட்டது. இதில் மற்றவர்களும் அத்துமீறி பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்களும் இந்த பாதையை அதிகம் உபயோக படுத்தினால் அந்த பிரத்யேக பாதை சீக்கிரத்தில் சேதமடையும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு இடையூறும் வராமலும் அவர்கள் சீருடனும் சென்று வரவும் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
தற்போது ஐந்து போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர். தேவை கருதினால் காவலாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.