செய்திகள்

ஆஞ்சநேயர் பிறந்த மலையில் விரைவில் ரோப்வே திட்டம்!

கல்கி டெஸ்க்

வ்வொரு இந்திய புராண கதையின் பின்னால் சில புவியியல் குறியீடுகள் இருக்கும். அதை வைத்து அந்த கதாபாத்திரங்கள் பிறந்த இடம் என்று சில குறிப்பிடப்படும். அங்கு இந்த கதாபாத்திரங்கள் அல்லது தெய்வங்களாக போற்றப்படுபவர்களுக்கான கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தளங்கள் உருவாக்கப்படும்.

அப்படி ராமாயணத்தில் நடந்த நிகழ்வுகளை வைத்து பல இடங்கள் தனித்துவம் பெற்று விளங்கி வருகின்றன. அந்த பட்டியலில் உள்ள ஒரு இடம் தான் அனுமன் பிறந்த அஞ்சனேரி மலை. ராமர் சீதை பிரிந்த பின்னர். திருவருளும் இடையில் இணைப்பு பாலமாக இருந்தவரும் போரின் கதையின் முடிவில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு காரண கர்த்தாவாக இருந்தவரும் அனுமன் தான்.

நெஞ்சை பிளந்து தனது பக்தியை வெளிப்படுத்திய அனுமன் பிறந்த இடம் மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரத்திற்கு அருகே அஞ்சநேரி மலைகள் என்று குறிப்பிடப்படுகிறது. அனுமனின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்கு ஒரு குகையும் அஞ்சனி மாதா கோயிலும் இருக்கிறது. இதனை யாத்ரீகர்களும், பக்தர்களும் சென்று வழிபடுகின்றனர்.

அஞ்சநேரி மலைகள்

கிட்டத்தட்ட 4,200 அடிக்கு மேல் உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் மூன்று மலைகள் ஏறிச் செல்ல வேண்டும். மலையடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டுமானால் குறைந்தது 2 மணியிலிருந்து 3 மணி நேரம் பிடிக்கிறது. நடக்க முடியும் பக்தர்கள் இதை எப்படியாவது கடந்து விடுகின்றனர்.ஆனால் குழந்தைகள் மற்றும் வயதில் மூத்தோர் இந்த மலையை ஏறி செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரும் முனைப்பில், ஹனுமனின் பிறப்பிடமாக நம்பப்படும் நாசிக்கில் உள்ள அஞ்சனேரி மலைகளுக்கு 6 கிலோமீட்டர் நீளமுள்ள ரோப்வே அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் 377 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைக் காணும் என்று தெரிகிறது.

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரம்மகிரி மலையேற்றப் பகுதியிலிருந்து அஞ்சநேரி மலைகள் வரை செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, ​​செங்குத்தான சாலையாக இருப்பதால், நடந்து செல்ல இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும். அதே முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள 5.7 கிமீ நீளமுள்ள ரோப்வே வந்துவிட்டால் மூன்று மலைகளின் குறுக்கேஉள்ள தூரத்தை ஒரு சில நிமிடங்களுக்குள் கடந்து விடலாம்.

அஞ்சநேரி மலைக்கு செல்லும் பக்தர்கள்

பர்வரத்மலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புனிதத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் 99 கி.மீ நீளத்திற்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் ஆஞ்சனேரி மலையும் அடங்கும். இது தவிர ஸ்ரீநகரில் இருந்து சங்கராசார்யர் கோயிலுக்கு ஒரு கி.மீ தூரத்திற்கும், கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்கத்திற்கு கிருஷ்ணா ஆற்றின் மீதும் ரோப் கார் வசதி அமைக்கப்பட இருக்கிறது.

இதேபோல், தமிழகத்தில், பிரபலமான மலைவாசஸ்தலமான, பழனியில் இருந்து கொடைக்கானல் வரை, 12 கி.மீ., ரோப்வே திட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொடசாத்ரி மலைகளுக்கு மற்றொரு 7-கிமீ ரோப்வே உள்ளது. மேலும், இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் உள்ள பிஜிலி மகாதேவ் கோயிலுக்கு 3-கிமீ க்கு ரோப்வே அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT