மாதிரி படம் 
செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. உடனே தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க!

விஜி

ரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு வருகின்ற 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடப்பு 2023-2024 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது . 

அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு பின்பற்றி தலா 500 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தெரிவு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

இதற்கான திறனாய்வுத் தேர்வு, தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில், இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.

இதற்காக, விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 18 ஆம் தேதிக்குக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, திறனாய்வுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT