சிட்ரங் புயல்  
செய்திகள்

வருகிறது "சிட்ரங்" புயல் ! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

கல்கி டெஸ்க்

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதியதாக உருவாக உள்ள புயலுக்கு ‛சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமானில் உள்ள வளிமண்டல சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம்

தெற்கு அந்தமானில் உள்ள வளிமண்டல சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக மாறும். வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு தாய்லாந்தால் பரிந்துரைக்கப்பட்ட ‛சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT