இந்தியாவில் பல காய்ச்சல் பரவி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் எலிக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், இந்த வருடம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக கொசு மூலமும், பறவைகள் மூலமும் மற்றும் விலங்குகள் மூலமும் ஏராளமான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. சில சமயம் இந்த வைரஸ்களை எதிர்க்கொள்ள முடியாதவர்கள் உயிரிழக்க நேரிடும். ஆனால், சில நோய்கள் அந்த அளவிற்கு உயிர் சேதத்தை ஏற்படுத்தாது.
எலிக்காய்ச்சல் என்பது நுண்ணியிரான லெப்டோஸ் பைரா எனப்படும் பாக்டீரியாவால் பரவக்கூடியது. இந்த பாக்டீரியா நாய்கள், பன்றிகள் போன்ற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியவை. குறிப்பாக எலிகள் மூலம் அதிகம் பரவும். ஒவ்வொரு ஆண்டும் எலிக்காய்ச்சலால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை சுகாதாரத்துறையால் ஆலோசிக்கப்படும்.
அந்தவகையில் இந்தாண்டு இதுவரை எத்தனைப் பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எப்போதும் இந்தியளவில் ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம் பேருக்கு இந்தத் தொற்று ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை தமிழகத்தில் மட்டும் 1,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021-ம்ஆண்டில் 1,046 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. 2022-ல் 2,612 ஆகவும், கடந்த ஆண்டில் 3,002 ஆகவும் இருந்தது. நடப்பாண்டில் இதுவரை 1,369 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெப்டோஸ்பைரோஸ் பாக்டிரியா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை குஜராத், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், அந்தமான் – நிகோபர் மாநிலங்களில் மத்திய அரசு தொடங்கியது.
எலிக்காய்ச்சலால் உயிர்சேதங்கள் எதுவும் இதுவரை நிகழவில்லை. ஆனால், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே, இந்தக் காய்ச்சல் வீரியம் அடையாமல் தடுக்கமுடியும்.