செய்திகள்

பழம் பெரும் நடிகை ஜமுனா மறைவு! அவர் குறித்த சில நினைவலைகள்.....!

கல்கி டெஸ்க்

தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜமுனா. மூத்த நடிகையானா இவர் உடல்நலக்குறைவால் காலமானார்.1954-ம் ஆண்டு பணம் படுத்தும் பாடு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்.வி.பிரசாத் இயக்கிய மிஸ்ஸியம்மா படம் ஜமுனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது.86 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நேற்றிரவு அவரது உயிர் பிரிந்தது. ஜமுனாவின் உடல் இன்று காலை ஐதரபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பருக்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் என்.டி.ஆருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு சினிமாவில் மட்டுமே 190 படங்களுக்கும் மேலே நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தமிழ் எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெய்சங்கர் என பல நடிகர்களுடன் நடித்த மூத்த நடிகையான ஜமுனா இன்று ஜனவரி 27 வெள்ளிக்கிழமை 2023ஆம் ஆண்டு காலமானார். இவர்க்கு தற்போது 86 வயதாகிறது. இவர் 1936ஆம் ஆண்டு சீனிவாச ராவ் – கவுசல்யா தேவிக்கு மகளாய் பிறந்தார். இவருடைய சொந்த ஊர் அந்திரப்பிரதேசத்தில் உள்ள தெனாலிக்கு அருகில் உள்ள துக்கிரலா கிராமம். இப்படி இருந்த ஜமுனா தன்னுடைய அம்மாவின் ஒத்துழைப்பால் சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

நடிகை ஜமுனா தெலுங்கு சினிமா மட்டுமின்று தமிழிலும் சில படங்கள் நடித்திருக்கிறார். இவர் குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவை ரசிகர்கள் மனதில் நிற்கும் படியான பெயரை இவருக்கு வாங்கி கொடுத்து. உதாரணமாக கடன் வாங்கி கல்யாணம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும் ஒன்று, தங்கமலை ரகசியம், மிஸ்ஸியம்மா போன்ற படங்களிலும் எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்திலும் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் 1968ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது, 1999ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு கவுரவ விருது, 2010ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அக்னி நட்சத்திர காலத்தில் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?

முழங்கால் மூட்டு வலிக்கு காரணமும் உடனடி எளிய தீர்வும்!

ஆசியாவிலேயே உயரமான ஸ்தூபி, 130 அடி உயர புத்தரின் சிலை உள்ள மைண்ட்ரோலிங் மடாலயம்!

வீட்டில் 'உருளி' வைக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

SCROLL FOR NEXT