மாதிரி படம் 
செய்திகள்

தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த 934 கோடி ஒதுக்கீடு: ரயில்வே துறை அறிவிப்பு!

க.இப்ராகிம்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒன்றிய அரசின் ரயில்வே துறையால் அமரித் பாரத் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த 934 கோடி ரூபாய் ரயில்வே துறையினால் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தென்னக ரயில்வே துறை, “ தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு கீழ் வரும் சென்னை கோட்டத்திற்கு 251.97 கோடி மதிப்பீட்டில் 4 பணிகளும், பாலக்காடு கோட்டத்திற்கு 195.54 கோடியில் 26 பணிகளும், சேலம் கோட்டத்தில் 150 கோடி மதிப்பீட்டில் 22 பணிகளும், திருச்சி கோட்டத்தில் 123.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 பணிகளும், திருவனந்தபுரம் கோட்டத்திற்கு 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 பணிகளும், மதுரை கோட்டத்திற்கு 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 பணிகளும் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை கூட்டத்தில் 20 ரயில் நிலையங்களும், மதுரை கோட்டத்தில் 18 ரயில் நிலையங்களும், திருச்சி கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களும், சேலம் கோட்டத்தில் 16 ரயில் நிலையங்களும் தரம் உயர்த்தப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் ரயில்வே மேம்பாலங்கள், எஸ்கலெட்டர்கள், லிப்ட்டுகள், வாகன நிறுத்துமிடம், காத்திருப்போர் அறைகள், பயணிகள் தகவல் மையம், பலகைகள், பிளாட்பாரம் மேம்படுத்துதல், பிளாட்பாரத்தில் இருக்கைகள் அமைப்பு, தண்ணீர் வசதி, மின்சாரம், சிசிடிவி கேமரா, சிற்றுண்டி உணவகம் மற்றும் 600 மீட்டர் அளவு நடைமேடை உயர படுத்தும் திட்டம், சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்று நடும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT