செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!

கல்கி டெஸ்க்

ஸ்லாம் சமூகத்தினரின் பண்டிகையான பக்ரீத் வரும் 29ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை ஒட்டி, மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நாளை முதல் சென்னையில் இருந்தும் மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் பயணிகள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், “பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நாளை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன், கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கியமான இடங்கள் மற்றும் பெங்களூருலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கித் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் பயணிகள் தங்களின் பயணத்துக்கு முன்பதிவு செய்து, பயணம் செய்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT