M.K.Stalin family 
செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் விசேஷம்.. களைகட்டிய கோபாலபுரம் வீடு!

பாரதி

மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையை வரவேற்கும் நிகழ்ச்சி மிகவும் எளிதாக கோபாலபுரம் வீட்டில் நேற்று நடைபெற்றது.

முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்தி ஓவியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

செல்வி – முரசொலி தம்பதியினரின் மகள் எழிலரசி – ஜோதிமணி தம்பதியினருக்கு இரண்டு  மகள்கள் உள்ளனர். இளைய மகள் காருண்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். மூத்த மகள் ஓவியா. இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில்தான் வெகுநாட்களுக்கு பிறகு மு.க. அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக கலந்துக்கொண்டனர். இந்தநிலையில் சில காலங்களுக்கு முன்னர் தாய்மை அடைந்த ஓவியாவிற்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதுவும் கருணாநிதி வாழ்ந்த இல்லமான கோபாலபுரம் வீட்டில் நடத்த முடிவு செய்தனர்.

அந்தவகையில் நேற்று ஓவியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கவதற்கு முன் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவிடம் ஓவியா ஆசிர்வாதம்  வாங்கினார். அழகிரி சார்பில் அவரின் மனைவி காந்தி அழகிரி விழாவில் கலந்துக்கொண்டார். அதேபோல் மு.க.தமிழரசு மற்றும் மாறன் குடும்பத்தினர்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் திமுக வின் மூத்த அமைச்சர்கள் சிலரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர்.

இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் குடும்பம் மீண்டும் ஒன்றாகக் கூடியது. ஆனால் மு.க.அழகிரியும் மு.க.ஸ்டாலினும் 2021ம் ஆண்டு நடந்த ஓவியாவின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT