பட்டாசு
பட்டாசு  
செய்திகள்

பட்டாசு தீக்காயம் சிறப்பு வார்டு துவக்கம்! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை!

கல்கி டெஸ்க்

ஒவ்வொரு வருடமும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பட்டாசு வெடித்து தீ விபத்து அதிக அளவில் ஏற்படும். அந்த தீக்காயத்துக்கான சிறப்பு சிகிச்சைகள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்யப்படும். அதற்கான வசதிகள் அனைத்தும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

இதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 10 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கை , 10 சாதாரண படுக்கை என, 20 படுக்கைகளுடன் தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு

இந்த வார்டுகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று ஆய்வு செய்தார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் 75 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு 1973ல் துவங்கப்பட்டது. தற்போது, 24 மணி நேரம் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக உள்ளது.

தீக்காயம்

இந்த மருத்துவமனையில், 309 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இணைப்பு கட்டடம், 2024ல் செயல் பாட்டுக்கு வரும்.

இந்த தீபாவளி பண்டிகையை கூடுமானவரையில் பாதுகாப்போடு பட்டாசு வெடித்து கொண்டாடி , பட்டாசு விபத்துகளை தவிர்ப்போம்.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT