Sajit 
செய்திகள்

இலங்கையும் பாலஸ்தீனமும் ஒன்றாக நிற்கும் – இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித்!

பாரதி

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், இலங்கையும் பாலஸ்தீனமும் ஒன்றாக நிற்கும் என்று கூறியிருக்கிறார் இலங்கையின் SJB கட்சியின் தலைவர் சஜித்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் வெகு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது கொடூர தாக்குதல்களை நடத்திவருகிறது. ஹமாஸ் அமைப்பினைத் தாக்க திட்டமிட்ட இஸ்ரேல், காசாவின் அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது. இதனால், உலகநாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பிவருகின்றன.

அதேபோல் சில நாடுகள் அந்நாட்டுக்கு எதிராக சில முடிவுகளை எடுக்கின்றனர். முன்னதாக மாலத்தீவு தங்கள் நாடுகளில் இருக்கும் இஸ்ரேல் மக்களை உடனே வெளியேறும்படி கூறியது. அதேபோல் சமீபத்தில் இலங்கை அதிபர் காசாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துப் பேசினார். அதாவது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, பாலஸ்தீன அரசாங்கம் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

மேலும் இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக காசா நிதியத்தை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி முதலில் ஒரு மில்லியன் டாலரை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் பேசினார். அதேபோல் உடல்களை அடக்கம் செய்வது குறித்த பிரச்சனைகளை முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இதனால் முஸ்லிம் மக்கள் மனம் நொந்துள்ளனர். எனவே, உடலை அடக்கம் அல்லது தகனம் செய்தல் அல்லது உடலை விரும்பினால் மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரத் தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து தற்போது இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பேசினார். அதாவது, "நாங்கள் கண்டிப்பாக பாலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்போம். இஸ்ரேல் அரசின் பயங்கரவாத செயல்களையும், காசா மீதான தாக்குதல்களையும் கண்டிக்கிறோம். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை உடனே நிறுத்தவேண்டும் என்று பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த வருடம் இறுதிக்குள் இலங்கை பாலஸ்தீன மக்களுடன் ஒன்றாக நிற்கும்.” என்றார் அவர்.

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

A Day in History: The Great Balloon Race!

காசிக்கு நிகரான ஆலயம் தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

SCROLL FOR NEXT