செய்திகள்

கல் குவாரிகள் 4வது நாளாக வேலை நிறுத்தம்.

சேலம் சுபா

ட்டிடங்கள் கட்ட அடிப்படையான கற்கள் உற்பத்தி செய்யும் பணியில் உள்ள கல்குவாரிகள் நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சேலம் நாமக்கல் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கல்குவாரிகளும்  3500 ஜல்லி கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில்  மாநிலம் முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர் .

     தற்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று நான்காவது நாளாக நீடித்தது. இதனால்  கற்கள், ஜல்லிகள் கிடைக்காமல் சேலம் நாமக்கல் மாவட்டங்ளில் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சேலம் மாவட்ட பிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நல சங்க செயலாளர் ராஜா கூறுகையில் “சேலம் நாமக்கல் மாவட்டத்தில் 75க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பிரஷர் மற்றும் கட்டுமான தொழிலை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    இதற்கிடையே கனிம வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியும்  வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  “சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும் கனிம வளத்துறை அதிகாரிகளும் கல்குவாரிகளை பார்வையிட்டு பல்வேறு புகார்களை கூறி குவாரிகளை முடக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டி கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால் தமிழகம் எங்கும் எம். சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் உற்பத்தி  முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமான தொழில் முழுமையாக நின்றுவிட்டது. குறிப்பாக சென்னையில் மெட்ரோ ரயில் பணி மற்றும் அரசு மருத்துவமனைகள் கட்டும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையை சரி செய்ய பல்வேறு கனிமவள விதிகளின்படி அனைத்து குவாரிகளுக்கும் 30 வருடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும் குவாரி அனுமதியும் வழங்க வேண்டும். அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தயாரிக்கும் குடிசை தொழில்களுக்கான அனுமதியினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களை வழங்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். காலதாமதம் இன்றி விரைவாக குவாரிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை கல்குவாரி உரிமையாளர்கள் தமிழக அரசிடம் முன்வைத்துள்ளனர். எனவே கனிமவளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

    உரிமையாளர்களுக்கும் அரசுக்கும் இருக்கும் பிரச்சினையில் பாதிப்படைவது தொழிலாளிகள் தான் என்பதை மனதில் வைத்து இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தால் பலரது வாழ்வாதாரம் காக்கப்படும்.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT