பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் கட்டணங்களை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
வேலை மற்றும் பல்வேறு அலுவல்கள் காரணமாக சென்னையில் தங்கியுள்ள வெளியூர்காரர்கள் பலரும் பொங்கல் விடுமுறைக்கு தங்கள் ஊருக்கு செல்லவே விரும்புவர். பொதுவாகவே விடுமுறை நாட்களிலும், பண்டிகை தினங்களிலும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.
அதனை தவிர்க்கவே ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட்கள் முன் பதிவு செய்ய தொடங்கி விடுவது வழக்கமாகி விட்டது. அந்த முன்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுவது வழக்கம். நெரிசலை பயன் படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் எக்கசக்கமாக போக்குவரத்து விதிகளை மீறி கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. இது குறித்து வருடந்தோறும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது.
இதனை சரிசெய்யவே தமிழக அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இனி பேருந்து கட்டணத்தை உயர்த்தி, போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் 16000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சென்னையின் 5 பகுதிகளிலிருந்து அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்பும் சென்னை கோவை திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அவரவர் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் சங்கத்திடம் இது குறித்து தெரிவித்துள்ளோம்.
போக்குவரத்து துறை ஆணையாளர் மூலம் அவர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக தனி அதிகாரிகள் குழு கொண்ட நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆம்னி பேருந்துகளை சோதனை மேற்கொள்வார்கள் என்றார் அமைச்சர் சிவசங்கர்.
பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் கட்டணங்களை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடக்க எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.