டூவலர் 
செய்திகள்

வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசினால் இன்று முதல் சிக்கல்!

கல்கி டெஸ்க்

 சென்னையில்  போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இன்று முதல் கூடுதல் அபராதம் வசூலிக்கப் படும் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

 திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்து உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்;

 டூவலர் ஓட்டும்போது ஹெல்மெட், அணியாமலும், 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால் ரூ 1000 அபராதம் வசூலிக்கப்படும். வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து அடாவடி பயணம் செய்தால் முதல் முறை ரூ 500, இரண்டாவது முறை ரூ 1,500 அபராதம் வசூலிக்கப்படும்.

லைசனஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால்,ரூ. 10 ஆயிரம் அபராதம். அதிமேகமாக பைக் ரேஸ் போல வண்டி ஓட்டிச் சென்றால் ரூ 5000 அபராதம். மேலும் ஆம்புலன்ஸ் மற்றும்  தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.  மேலும் செல்போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினால் ரூ 1000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT