Vijay 
செய்திகள்

"நல்ல தலைவர்கள் தேவை... say no to drugs" மாணவர்களுக்கு அட்வைஸை அள்ளி தெளித்த விஜய்... என்ன பேசினார் தெரியுமா?

விஜி

தமிழகத்திற்கு நல்ல தலைவர் தேவை, அரசியலே ஒரு கெரியரா வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார். இதற்காக அவர் மிகவும் மும்மரமாக தயாராகி வருகிறார். அதன் ஒரு பகுதி தான், மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா. ஆண்டுதோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இளம் தலைமுறையினர் தான் அடுத்த அரசியல் டார்கெட் என்பதை கவனித்தில் கொண்டு இளைஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்று முழு நேர அரசியலில் குதித்த பிறகு இன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அரசியல் தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சிக்கு சென்று முகத்தை காட்டினார். பிறகு தற்போது தான் வெளியே வந்துள்ளார். அதன் படி, முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகிறது.

இந்த முறை பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. இன்றும் ( ஜூன் 28) , ஜூலை 3 ஆம் தேதியும் இந்த விழா நடக்க உள்ளது. அரியலூர், கோவை, தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்றுள்ளனர்.

பரிசு வழங்குவதற்கு முன்பாக மேடையில் பேசிய விஜய், மாணவர்களுக்கு அடுத்த வாழ்க்கை குறித்து அறிவுரை வழங்கினார். உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து கொள்ளுங்கள். வீட்டில் கலந்து பேசி தேவையுள்ள துறையை தேர்ந்தெடுங்கள். இன்றைக்கு நமக்கு தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான். அரசியலும் ஒரு வேலைவாய்ப்பாக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். நல்ல தலைவர்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து நண்பர்கள் தவறான பழக்கத்தில் நுழைந்தால் அவரை உடனடியாக மீட்டெடுங்கள். சமூகத்தில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு அரசியல் தலைவராக எனக்கும் அச்சம் உள்ளது. நீங்கள் இது போன்று போதைக்கு அடிமையாகிவிடக்கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும், "Say no to temporary pleasures, say no to drugs" என கூறி மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார். பிறகு, உரையை முடித்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க தொடங்கினார். சாதனை படைத்த மாணவகளுக்கு சான்றிதழ், வைர தோடு, வைர மோதிரம் பொன்னாடை பரிசாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT